Skip to main content

Posts

பதினெண் சித்தர்களின் பெயர்கள்

திருமூலர், இராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, போகநாதர், குதம்பைச் சித்தர், மச்சமுனி,  கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டிச் சித்தர். சட்டைமுனி, சுந்தரானந்த தேவர், கோரக்கர். இது ஒரு பட்டியல்; அகப்பேய் சித்தர், அழுகணிச் சித்தர், ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், சதோகநாதர், இடைக்காட்டுச் சித்தர், குதம்பைச் சித்தர், புண்ணாக்குச் சித்தர். ஞானச்சித்தர், மௌனச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், கல்லுளி சித்தர், , கஞ்சமலைச் சித்தர் நொண்டிச் சித்தர் விளையாட்டுச் சித்தர், பிரமானந்த சித்தர், கடுவெளிச் சித்தர், சங்கிலிச் சித்தர், திரிகோணச்சித்தர். நவநாத சித்தர்கள்;  வான்மீகர், பதஞ்சலியார், துர்வாசர், ஊர்வசி, சூதமுனி, வரரிஷி, வேதமுனி, கஞ்சமுனி, வியாசர், கௌதமர் பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர்; காலாங்கி, கமலநாதர், கலசநாதர், யூகி, கருணானந்தர், போகர், சட்டைநாதர், பதஞ்சலியார், கோரக்கர், பவணந்தி, புலிப்பாணி, அழுகணி, பாம்பாட்டி, இடைக்காட்டுச் சித்தர், கௌசிகர், வசிட்ட...
Recent posts

சித்தர்கள் கண்டறிந்த வியக்கவைக்கும் மருத்துவ - விஞ்ஞான நுட்பங்கள்!

சி த்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன. இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். "வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது உடலையும் பாதிக்கக் கூடியது. வெளியே உணரும் குளிர்ச்சி, நமது உடலிலும் கபமாகத் தோன்றக் கூடியது" என்று தத்துவங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய முறைப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நமது உடலை 72,000 ரத்தக் குழாய்களும், 13,000 நரம்புகளும், 10 முக்கிய தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். இந்த அடிப்படையில் 96 வகைத் துடிப்புகளை உ...